×

சிவபுரிபட்டியில் பிரதோஷ விழா

சிங்கம்புணரி, ஜூலை 16: சிங்கம்புணரி அருகே சிவபுரி பட்டியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சுயம்பரகேஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் கோயிலின் வெளிபகுதியில் ஐந்து அடி உயர நந்தி சிலைக்கு பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், மஞ்சள், பன்னீர் வாசனை திரவியங்கள், பழச்சாறுகள் என பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பக்தர்கள் காட்சியளித்தார். தொடர்ந்து சுயம்பரகேரஸ்வரர் சுவாமிக்கு வண்ணமலர் அலங்காரம் செய்யப்பட்டு உற்சவர் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சிங்கம்புணரி மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post சிவபுரிபட்டியில் பிரதோஷ விழா appeared first on Dinakaran.

Tags : Pradosha festival ,Shivapuripatti ,Singampunari ,Sivapuri Patti ,Sivambarakeswarar ,Sivagangai Samasthanam Devasthanum ,
× RELATED சிவன் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பு வழிபாடு