×

19 நகராட்சிகளின் ஆணையாளர்கள் பணியிட மாற்றம் நிர்வாக இயக்குனர் உத்தரவு குடியாத்தம், அரக்கோணம், ஆரணி, செய்யாறு உள்பட

வேலூர், ஜூலை 16: தமிழ்நாட்டில் அரக்ேகாணம், மேல்விஷாரம் நகராட்சி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, ஆரணி நகராட்சி, வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி உள்பட தமிழ்நாடு முழுவதும் 19 நகராட்சிகளில் பணியாற்றி வரும் ஆணையாளர்களை நிர்வாக வசதி காரணமாக இடமாற்றம் செய்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி ஆணையாளர் சுபாஷினி ராசிபுரம் நகராட்சிக்கும், சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி ஆணையாளர் நித்யா திருமங்கலம் நகராட்சிக்கும், கலக்காடு நகராட்சி ஆணையாளர் பார்கவி தேவக்கோட்டை நகராட்சிக்கும், புளியங்குடி நகராட்சி ஆணையாளர் சுகந்தி கடையநல்லூர் நகராட்சிக்கும், பல்லப்பட்டி நகராட்சி ஆணையாளர் குமரன் ஆரணி நகராட்சிக்கும், சீர்காழி நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் கம்பம் நகராட்சிக்கும், குன்றத்தூர் நகராட்சி ஆணையாளர் தாமோதரன் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கும், மதுராந்தகம் நகராட்சி ஆணையாளர் அருள் திருத்தணி நகராட்சிக்கும், தாராமங்கலம் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா எடப்பாடி நகராட்சிக்கும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி செங்கல்பட்டு நகராட்சிக்கும், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி ஆணையாளர் ரகுராமன் அரக்கோணம் நகராட்சிக்கும், உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையாளர் சரவணன் கொமாரபாளையம் நகராட்சிக்கும், திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளர் அப்துல் ஹரீஷ் சிவகங்கை நகராட்சிக்கும், புகளூர் நகராட்சி ஆணையாளர் கனிராஜ் காங்ேகயம் நகராட்சிக்கும், திட்டக்குடி நகராட்சி ஆணையாளர் ஆண்டவன் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கும், கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசி குடியாத்தம் நகராட்சிக்கும், கருமத்தப்பட்டி நகராட்சி ஆணையாளர் முத்துசாமி பல்லடம் நகராட்சிக்கும், வடலூர் நகராட்சி ஆணையாளர் பானுமதி விருத்தாசலம் நகராட்சிகும், ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளர் கண்ணன் முதல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ராமேஸ்வரம் நகராட்சிக்கு ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாற்றம் செய்யப்பட்டுள்ள நகராட்சி ஆணையாளர்கள் உடனடியாக தங்களது பணியிடங்களுக்கு சென்று பொறுப்பேற்றுக்கொள்ளும்படி நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

The post 19 நகராட்சிகளின் ஆணையாளர்கள் பணியிட மாற்றம் நிர்வாக இயக்குனர் உத்தரவு குடியாத்தம், அரக்கோணம், ஆரணி, செய்யாறு உள்பட appeared first on Dinakaran.

Tags : Kudiatham ,Arakkonam ,Arani ,Seiyaru ,Vellore ,Tamil Nadu ,Arakekanam ,Melvisharam Municipality ,Tiruvannamalai District Seyyar ,Arani Municipality ,Vellore District Gudiyatham ,Gudiyatham ,Seyyar ,
× RELATED காட்பாடியில் அகற்றிய சில மாதங்களில்...