×

தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி

சங்ககிரி ஜூலை 16:சங்ககிரி அருகே நாரப்பன்சாவடி இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் சார்பில், தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை சங்ககிரி டிஎஸ்பி ராஜா தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். சங்ககிரி தாசில்தார் அலுவலகத்தில் தொடங்கி, பயணியர் மாளிகை வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூத்த மேலாளர் ஹரிகரன், இந்தியன் ஆயில் பணியாளர்கள் மற்றும் சண்முகா பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் பேரணியில் பொது மக்களுக்கு தனிமனித தூய்மை மற்றும் சுற்றுப்புற தூய்மை பற்றி விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.

The post தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Clean India Awareness Rally ,Sangakiri ,Narappanchavadi Indian Oil Corporation.… ,Dinakaran ,
× RELATED தி.கோடு நகரில் பலத்த மழை