×

பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் இலவச பொது மருத்துவ முகாம்

பொன்னமராவதி, ஜூலை 16: பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. கேசராபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமை ஊராட்சி மன்றத்தலைவர் செல்வி தொடங்கி வைத்தார். பொன்னமராவதி மீனாட்சி பெரியண்ணன் மருத்துவமனை மருத்துவர்கள் விக்னேஸ்வரன், ஆஷிகா தலைமையிலா மருத்துவ குழுவினர் அப்பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் காய்ச்சல், சளி, சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

இம்மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இம்முகாமில் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், மேலாளர் தினேஷ், துணைத்தலைவர் ரோஜாபாணு, வார்டு உறுப்பினர் மகபத்நிசா, சதீஷ்குமார், ஊராட்சி செயலாளர் அழகப்பன், தலைமையாசிரியர் ஜெயஜோதி, அங்கன்வாடிப்பணியாளர் கருப்பாயி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்றம், மீனாட்சி பெரியண்ணன் மருத்துவமனை இணைந்து செய்திருந்தன. முன்னதாக பள்ளி மாணவர்கள், மருத்துவக்குழுவினர் 100 நாள் திட்ட பணியாளர்கள் இணைந்து காமராஜர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

The post பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Kesarapatti ,Ponnamaravati ,Panchayat Union Primary School ,Public Medical Camp ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...