×

தள்ளுவண்டி கடைக்காரரிடம் பணம் பறிக்க கத்தியை காட்டி மிரட்டிய சிறுவன் கைது

கோவை, ஜூலை 16: கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா(28). இவர், அப்பகுதியில் தள்ளுவண்டி கடையில் இட்லி, தோசை போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
இவரது கடைக்கு கோவை நேருநகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் சம்பவத்தன்று சாப்பிட வந்தார். அப்போது சாப்பிட்டு விட்டு பணம் தராமல் இளையராஜாவிடம் ரூ.300 வேண்டும் என கத்தியை காட்டி மிரட்டினார். உடனே இளையராஜா சத்தம் போட்டு அருகில் உள்ள ஆட்டோ டிரைவர்களை உதவிக்கு அழைத்தார். இதைக்கேட்டு ஓடி வந்த ஆட்டோ டிரைவர்கள் அச்சிறுவனை பிடித்து பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறார் சிறையில் அடைத்தனர்.

The post தள்ளுவண்டி கடைக்காரரிடம் பணம் பறிக்க கத்தியை காட்டி மிரட்டிய சிறுவன் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ilayaraja ,Kalapatti, Coimbatore ,
× RELATED கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்:...