×

சிங்கப்பூரில் ஊழல் புகார் குற்றச்சாட்டு இந்திய வம்சாவளி அமைச்சர் ஈஸ்வரன் கைதாகி விடுதலை: விடுமுறையில் செல்ல பிரதமர் உத்தரவு; பாஸ்போர்ட் பறிமுதல்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமைச்சர் ஈஸ்வரன் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு, உடனே விடுவிக்கப்பட்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த எஸ்.ஈஸ்வரன்(61) கடந்த 1997ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2006ம் ஆண்டு பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவையில் இடம் பெற்றார். தற்போது போக்குவரத்து தறை அமைச்சராக உள்ளார். சிங்கப்பூரை விமானப் போக்குவரத்து மையமாக மாற்ற ஈஸ்வரன் எடுத்த முயற்சிகள் பாராட்டைப் பெற்றன.

இந்நிலையில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் எந்த துறை ஊழல் என்பது குறித்து தகவல்கள் வௌியிடப்படவில்லை. இதையடுத்து ஈஸ்வரனை கட்டாய விடுப்பில் செல்லும்படி பிரதமர் உத்தரவிட்டார். இந்நிலையில் சிங்கப்பூர் ஊழல் நடைமுறைகள் விசாரணை பணியகம் ஈஸ்வரனை கைது செய்து, உடனே ஜாமீனில் விடுதலை செய்தது. ஈஸ்வரனுடன் தொடர்பில் இருந்த ஓட்டல் தொழிலதிபர் ஓங் பெங்க் சாங்க் என்பவரும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் இருவரின் பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

* ஈஸ்வரனின் விடுதலையில் பிரதமரின் தலையீடு இல்லை
சிங்கப்பூர் அதிபர் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான தர்மன் சண்முகசுந்தரம் கூறும்போது, “சிங்கப்பூர் திறமைகளையும், திறமையாளர்களையும் பெற்றுள்ளது. இங்கு நேர்மையும், ஊழலற்ற அரசும் ஆட்சி செய்கிறது. ஊழல் நடைமுறைகள் விசாரணை பணியகம் தனது பணியை செய்ய விடாமல் பிரதமர் தடுத்தார் என்று கூறப்படுவதில் உண்மையில்லை. பிரதமர் லீ சியென் லூங் அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர் அல்ல. ஈஸ்வரனின் விடுதலையில் பிரதமரின் தலையீடுகள் இல்லை” என்று கூறினார்.

The post சிங்கப்பூரில் ஊழல் புகார் குற்றச்சாட்டு இந்திய வம்சாவளி அமைச்சர் ஈஸ்வரன் கைதாகி விடுதலை: விடுமுறையில் செல்ல பிரதமர் உத்தரவு; பாஸ்போர்ட் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Minister of origin ,Eswaran Kaithaki ,Singapore ,Minister ,Eswaran ,origin ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...