×

ஜெகன் மனைவிக்கு சொந்தமான சிமெண்ட் முடக்கம் சொத்து ரத்து அமலாக்கத்துறை மனு தள்ளுபடி

திருமலை: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகனின் மனைவி ஒய்.எஸ்.பாரதி. இவர் மீது பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை இயக்குநரகத்தால் முடக்கப்பட்ட பாரதி சிமெண்ட் சொத்துக்களுக்கு பதிலாக, அதற்கு இணையான நிரந்தர வைப்பு நிதியாக மாற்ற ஒய்.எஸ்.பாரதிக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்க இயக்குநரகம் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. இந்த மனுக்களை நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் நீதிபதி சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்தனர். பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் பாரதி சிமெண்ட் தொடர்பான சொத்துக்களை அமலாக்கத்துறை இயக்குனரகம் முடக்கம் செய்திருந்தது பற்றி விசாரணை நடந்தது.இந்நிலையில் இருதரப்பு வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட மறுத்துவிட்டனர். இதனால் பாரதி சிமெண்ட முடக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெறப்பட்டது.

The post ஜெகன் மனைவிக்கு சொந்தமான சிமெண்ட் முடக்கம் சொத்து ரத்து அமலாக்கத்துறை மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Jegan ,Tirumalai ,Andhra State ,Chief Minister ,Jehkanmokan ,Y. S.S. Bharati Bharati ,Enforcement Directorate ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...