×

பொதுசிவில் சட்டம் தேச ஒற்றுமைக்கு எதிரானது: பாமக தலைவர் அன்புமணி எதிர்ப்பு

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரும்பான்மை இந்து மதத்தைச் சார்ந்த பட்டியலினம் மற்றும் பழங்குடியின மக்கள் காலம் காலமாக கடைபிடித்து வரும் திருமணம் தொடர்பான சடங்குகளையும் பொது சிவில் சட்டம் சிதைத்து விடும் என்பதை சட்ட ஆணையம் உணர வேண்டும். பொதுசிவில் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21ம் சட்ட ஆணையம் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தது. 4 ஆண்டு இடைவெளியில் பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை 22ம் சட்ட ஆணையம் தொடங்கியிருப்பது சரியல்ல.

இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் என்று கூறிவிட்டு, ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்து விடும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post பொதுசிவில் சட்டம் தேச ஒற்றுமைக்கு எதிரானது: பாமக தலைவர் அன்புமணி எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Bambaka ,Anmani ,Chennai ,Annemmani ,Bambama ,Anbaramani ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...