×

இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டமன்றத் தேர்தல்; 3 மாநிலங்களை குறிவைத்து பாஜக ‘யாத்திரை’ அறிவிப்பு: செல்வாக்கில்லாத தெலங்கானா, மிசோரமில் மவுனம்

புதுடெல்லி: இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் 3 மாநிலங்களில் பாஜகவின் ‘யாத்திரை’ தொடங்கப்படவுள்ளது. தெலங்கானா, மிசோரமில் செல்வாக்கில்லாததால் அங்கு யாத்திரைகள் அறிவிப்பு வெளியாகவில்லை. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்தாண்டு நவம்பர் வாக்கில் சட்டசபை தேர்தல் நடைபெறும். மிசோரமில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றாலும் கூட எம்என்எப் கட்சி தலைமையில் தான் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தெலுங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், பாஜகவுக்கு அங்கு செல்வாக்கு இல்லாததால் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால், அந்த மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற பாஜக வியூகங்களை வகுத்து வருகிறது. அதேநேரம் மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. பாஜகவை பொருத்தமட்டில் ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் தான் முக்கியமானதாக உள்ளன.

அதையடுத்து மேற்கண்ட 3 மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களையும் தேசிய தலைமை நியமித்துள்ளது. அவர்களது தலைமையில் தேர்தல் வியூகத்தை செயல்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சமீபத்தில் டெல்லி வந்து தேசிய தலைமையுடன் ஆலோசனை நடத்தினார். சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா போபாலுக்குச் சென்று கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து பாஜக தேசிய தலைவர்கள் கூறுகையில், ‘ராஜஸ்தானில் ‘பரிவர்தன் யாத்ரா’ என்ற பெயரில் யாத்திரையும், மத்திய பிரதேசத்தில் ‘ஜன் ஆஷிர்வாத் யாத்ரா’ என்ற பெயரில் யாத்திரையும் தொடங்கப்படும்.

அதேபோல் சட்டீஸ்கரிலும் யாத்திரை தொடங்கப்படும். யாத்திரைகளின் ஒருபகுதியாக இதர தேர்தல் நிகழ்ச்சிகளும் இருக்கும். தேசிய தலைவர்கள் அந்த யாத்திரையில் பங்கேற்பார்கள். மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் குறித்த வியூகத்தை இறுதி செய்வதில் தேசிய தலைவர் நட்டாவும், அமைச்சர் அமித் ஷாவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மழையின் தீவிரம் குறைந்தவுடன், தீவிர பிரசாரம் தொடங்கும்’ என்றனர்.

The post இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டமன்றத் தேர்தல்; 3 மாநிலங்களை குறிவைத்து பாஜக ‘யாத்திரை’ அறிவிப்பு: செல்வாக்கில்லாத தெலங்கானா, மிசோரமில் மவுனம் appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Telangana ,Maunam ,Mizoram ,New Delhi ,Bajaga's' ,Assembly elections ,Assembly ,
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...