×

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி உள்ளிட்ட 14 கோரிக்கை அடங்கிய மனு: ஒன்றிய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை: கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி வேண்டும் என்பன உள்ளிட்ட 14 கோரிக்கை கொண்ட மனுவை ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற அனைத்து மாநில சுகாதார துறை அமைச்சர்களுடனான 15வது சுகாதார மாநாட்டில் தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது தமிழ்நாடு அரசின் 14 கோரிக்கைகள் கொண்ட மனுவை மன்சுக் மாண்டவியாவிடம் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

கோரிக்கையின் விவரம்:
* மருத்துவ கல்வி சேர்க்கை கொள்கை மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்விற்கு (நீட்) எதிர்ப்பு.
* கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி வேண்டும்.
* 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் நிறுவ வேண்டும்.
* தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் நிறுவ வேண்டும்.

* மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகளுக்கு ஆட்சேபனை.
* சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ பட்டதாரி படிப்புகளுக்கான உத்தேச பொது கலந்தாய்வுக்கு ஆட்சேபனை
* தேசிய மருத்துவ ஆணையத்தின் (மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களை நிறுவுதல், மதிப்பீடு மற்றும் மருத்துவ கல்விக்கான இடங்களில் அதிகரிப்பு, * (2023) வரைவுக்கு ஆட்சேபனை பொது மக்களின் கருத்துக்காக சமீபத்தில் வெளியிடப்பட்டது.

* காலியாக உள்ள அனைத்து இந்திய எம்.பி.பி.எஸ் இடங்கள் மாநிலத்திற்கு ஒப்படைக்கப்படும்.
* 50 புதிய கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவ வேண்டும்.
* 50 புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவ வேண்டும்.
* 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும்.

* 1000 புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் நிறுவ வேண்டும்.
* 1000 புதிய கிராமப்புற துணை சுகாதார நிலையங்கள் நிறுவ வேண்டும்.
* சென்னை, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கைகள் கொண்ட முக்கிய மருத்துவ சேவை கட்டிடம் நிறுவ வேண்டும்.

The post கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி உள்ளிட்ட 14 கோரிக்கை அடங்கிய மனு: ஒன்றிய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : AIIMS Hospital ,Temple ,Union ,Minister ,Subhiramanian ,Chennai ,Goa ,Minister of State ,Suframanyan ,
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான...