×

கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை: கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பழம்பெருமை மிக்க மாமதுரையின் புதிய மணிமகுடமாக உலகத்தரத்தில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்; கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கும் பெரும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நூலகம் அமைக்காமல் எங்கு அமைக்க முடியும்? கலைஞர் நூலகம் மூலம் மதுரையில் அறிவுத் தீ பரவப் போகிறது.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை; கலைநகர் மதுரை. திராவிட இயக்கம் என்றாலே அறிவு இயக்கம்தான். திராவிட இயக்கம் என்றாலே அறிவுத் தீ; படித்தும் பேசியுமே வளர்ந்தவர்கள் தான் திராவிட இயக்கத்தினர். பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காத ஷிவ் நாடார், அவரது மகள் ரோஷிணியையும் மாணவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே விழாவுக்கு அழைப்பு விடுத்தோம். இந்திய தொழிலதிபர்களில் அதிக நன்கொடை வழங்கி வருபவர் ஷிவ் நாடார். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ள ஷிவ் நாடார், அரசுப் பள்ளியில் படித்தவர்தான்.

அரசுப் பள்ளியில் படித்து சிறு நிறுவனத்தை தொடங்கி மிகப்பெரிய நிறுவனமாக வளர்த்துள்ளார் ஷிவ் நாடார். ஷிவ் நாடார் மற்றும் அவரது மகள் ரோஷிணி, மாணவர்களுக்கு நம்பிக்கை அளிப்பவர்கள். கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வோம் என்பதற்கு சென்னை மருத்துவமனையும், மதுரை நூலகமும் சான்று. காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர். காமராஜரின் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளில்தான் கலைஞர் நூலகத்தை திறந்து வைத்துள்ளோம். திமுக ஆட்சியில்தான் கல்விப் புரட்சி ஏற்பட்டது.

திமுக ஆட்சிக்கு வரும் முன்பு தமிழ்நாட்டில் 68 கல்லூரிகள் மட்டுமே இருந்தன. கலைஞர் முதலமைச்சராக பதவி வகித்தபோது மட்டும் 97 கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. கல்வியில் முதலிடத்தை பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது.

The post கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : CM. ,G.K. Stalin ,Madurai ,Chief Minister ,Mukhera ,Association of Tamil ,CM ,
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...