- திருமயம் கோட்டை மலை, புதுக்கோட்டை மாவட்டம்
- புதுக்கோட்டை
- திருமயம் கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- திருமயம்...
- திருமயம் கோட்டை மலை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை அமைந்துள்ள மலை பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நான்கு குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருமயம் மலையின் மேல்பகுதியில் கி.பி 17ம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டையும் கி.பி 9ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன், விஷ்ணு குடைவரை கோவில்களும் உள்ளன.
இந்நிலையில் புதுக்கோட்டை அருங்காட்சியக ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் ராஜாமுகமது தலைமையில் ஒன்றிய தொல்லியல் உதவி அலுவலர் முத்துக்குமார் தமிழ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் கருணாகரன் ஆகியோர் மலையின் தெற்கு சரிவு பகுதியில் ஆய்வு செய்தனர் அப்போது பல்வேறு அளவுகளில் நான்கு குகைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
திருமயம் மலையை சுற்றி பல சிறிய குகைகள் அழிக்கப்பட்டதற்கான எச்சங்களையும் தொல்லியல் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து குகைகளின் எச்சங்களை கண்டறிவது குறித்தும் மூடப்பட்டுள்ள குகைகள் பற்றியும் அவர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இது போன்ற குகைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாவளை, அம்மாசத்திரம், குடுமியான் மலை, தேனிமலை, சித்தன்னவாசல் போன்ற இடங்களிலும் உள்ளன.
The post புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை மலையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 4 குகைகள் கண்டுபிடிப்பு..!! appeared first on Dinakaran.