×

ஊட்டி எமரால்டு பகுதியில் கழிப்பிட கட்டுமான பணி மீது மக்கள் அதிருப்தி

ஊட்டி : ஊட்டி அருகே எமரால்டு பகுதியில் புதிதாக கட்டப்படும் கழிப்பிட கட்டிடத்திற்கு ஏற்கனவே பயன்படுத்திய செங்கல்கள் பயன்படுத்தி கட்டப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எமரால்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வசதிக்காக கடந்த பல ஆண்டுக்கு முன்பு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே மைதானத்திற்கு அருகே ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

சில காலம் முறையாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அதன்பின் பராமரிப்பில் தொய்வு ஏற்பட்டதால், செடிகள் முட்புதர்கள் வளர்ந்தும், மண் மற்றும் குப்பைகள் குவிந்து அலங்கோலமாக காட்சியளித்தது. மேலும் கழிப்பிட கட்டிடமும் சேதமடைந்து காட்சியளித்தது. சேதமடைந்துள்ள இந்த கழிப்பிடத்தை அகற்றி விட்டு சுகாதார வளாகம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து முள்ளிகூர் ஊராட்சி சார்பில் புதிதாக கழிப்பிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்காக நிதி ஒதுக்கீடும் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கிய நிலையில், பழுதடைந்த கழிப்பிட கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. பழைய கழிப்பிடத்தில் பயன்படுத்தப்பட்ட செங்கல் உள்ளிட்டவைகள் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து பள்ளம் தோண்டப்பட்டு அடித்தளம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து கட்டிட கட்டுமான பணிக்காக புதிதாக செங்கல் கொண்டு வராமல் இடிக்கப்பட்ட கழிப்பிடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தரமற்ற செங்கல்களை கொண்டு கட்டுமான பணியை ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

தரமற்ற கழிப்பிட கட்டுமான பணியால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ள நிலையில், இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேள்வி எழுப்பியும் அலட்சியமாக காட்டுவதாக தெரிகிறது.
ஏற்கனவே உள்ள கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் தான், புதிதாக நவீன வசதிகளுடன் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் புதிதாக கட்டப்படுவதும் தரமின்றி இருந்தால் என்ற செய்வது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தரமற்ற கழிப்பிட கட்டுமான பணி தொடர்பாக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அனுப்பியுள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் இவ்விவகாரத்தில் தலையிட்டு கழிப்பிட கட்டுமான பணி தரமாக நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஊட்டி எமரால்டு பகுதியில் கழிப்பிட கட்டுமான பணி மீது மக்கள் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Feeder ,Emerald ,Dinakaran ,
× RELATED 30 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி மணல்...