×
Saravana Stores

உதைகை மலை ரயிலுக்கு கட்டணத்தை குறைக்க வேண்டும்: கட்டணத்தில் சலுகை வழங்க உள்ளூர் வாசிகள் கோரிக்கை

குன்னூர்: நூற்றாண்டு பழமைவாய்ந்த உதகை மலை ரயிலில் பயணிக்க உள்ளூர் மக்களுக்கு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 1899-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வரும் உதகை மலை ரயில் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இயற்கையான சூழல், மலைகளின் நடுவே அருவிகள், காட்டு யானைகள், விதவிதமான பறவைகள் என பலவற்றையும் ரயிலில் இருந்தவாறே பயணிகள் ரசிக்க முடியும்.

குன்னூரில் இருந்து உதகைக்கு படிக்க செல்வோரும் இந்த ரயிலையே ஒரு கட்டத்தில் பயன்படுத்தி வந்தனர். ஆனால், கட்டண உயர்வால் தற்போது அதில் பயணிக்க முடியாத நிலை நிலவுவதாக உள்ளூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றன. இதனிடையே 18 ஆண்டுகளுக்கு முன்பு யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக இந்த மலை ரயில் அறிவிக்கப்பட்டதை உள்ளூர் வாசிகள் பெருமையாக கருதுகின்றன. கடந்த 2015-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு உதகை மாலை ரயிலை உலக பார்ம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்தது.

The post உதைகை மலை ரயிலுக்கு கட்டணத்தை குறைக்க வேண்டும்: கட்டணத்தில் சலுகை வழங்க உள்ளூர் வாசிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Yukkai Mountain Train ,Gunnur ,Till Mountain Train ,Dinakaran ,
× RELATED குன்னூரில் பலத்த மழை காரணமாக...