×

நெல்லை வாலிபர் குண்டாசில் கைது

சேலம், ஜூலை 15: சேலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி களக்காடு பக்கமுள்ள வியாசராஜபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகன் பாபு(33) குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தாதகாப்பட்டி பகுதியில், கடந்த 24ம்தேதி  பாபு என்ற ஆட்டோ டிரைவரிடம், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த புகாரின் பேரில், அன்னதானப்பட்டி போலீசார் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர் விசாரணையில் பணம் கொடுக்கல்-வாங்கல் விவகாரத்தில், சிவக்குமார் என்பவரை கூலிப்படையை ஏறி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதில் கூலிப்படையினர் கைது செய்யப்பட்ட நிலையில், பாபுவையும் பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது இரும்பாலை போலீஸ் ஸ்டேசனிலும் வழக்கு இருக்கிறது. இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால், இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சின்னதங்கம், துணை கமிஷனர் லாவண்யா ஆகியோர், மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரிக்கு பரிந்துரை செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கமிஷனர், பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, சேலம் சிறையில் உள்ள அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

The post நெல்லை வாலிபர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Tags : Nellie ,Kundazi ,Salem ,Ishakhimuthu ,Vyasarajapuram ,Nanguneri Kalakadu ,Tirunelveli district ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...