×

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

 

கரூர், ஜூலை 15: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மாவட்ட குடும்ப நலச் செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தினம் 2023ஐ முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தொடக்கி வைத்தார். உலக மக்கள் தொகை தினமானது ஆண்டுதோறும் ஜூலை 11ல் கடைபிடிக்கப்படுகிறது. இந்த பேரணியில் நமது தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்காவும், தாய்மார்களின் நல்வாழ்விற்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் முதன்மையானதும், முக்கியமானதாகும் என்பதை நான் அறிந்துள்ளேன். சிறு குடும்ப நெறி, திருமணத்துக்கு ஏற்ற வயது, முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்ப நலமுறைகள், முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி, ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், தாய் சேய் நலத்தை பாதுகாத்தல், பெண் கல்வியை மேலும், ஊக்குவித்தல், ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல், பெண் சிசுக் கொலையை தடுத்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் பெண் சிசுக் கொலையை தடுத்தல், மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு போன்ற செய்திகளை அனைவருக்கும் எடுத்துக் கூறுவதில் என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் என உறுதி அளிக்கிறேன்.

குடும்ப நலத் திட்டங்களை மக்கள் இயக்கமாக மலரச் செய்ய என்னை நான் முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வேன் எனவும் உறுதியளிக்கிறேன். என்னுடைய இந்த முயற்சிகள் வெற்றியடைய இயற்கை எனக்கு துணை நிற்கட்டும் என்ற பதாதைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தாந்தோணி அரசு கலைக் கல்லூரி வரை சென்றது. முன்னதாக உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழியை கலெக்டர் ஏற்றுக் கொள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தாமோதரன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) ரமாமணி, துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) சந்தோஷ்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் (பொ) சாந்தி உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

 

The post கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : World Population Awareness Rally ,Karur Collectorate ,Karur ,Medical, People's Welfare Department District ,Karur District Collector ,Karur Collector's ,Dinakaran ,
× RELATED செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்