×

புதிய வரி விதிப்பின் கீழ் ரூ.7.27 லட்சம் வரை வருமான வரி இல்லை: நிர்மலா சீதாராமன் விளக்கம்

உடுப்பி: புதிய வரிவிதிப்பின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.7.27 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஆடமார் மடம் மற்றும்  கிருஷ்ணர் கோயிலுக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்றார். மேலும் உடுப்பியில் உள்ள இந்திய ரத்தினங்கள் மற்றும் நகைக் கழகத்தில் பொது வசதி மையத்தையும் அவர் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடுத்தர மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.7.27 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு உட்பட பல வரி சலுகைகளை வழங்கியுள்ளது. சமூகத்தின் எந்தப் பிரிவினரும் அரசால் ஒதுக்கி வைக்கப்படவில்லை.

2023-24ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டபோது சில இடங்களில் சந்தேகம் இருப்பதாக பலர் தெரிவித்தனர். ரூ.7 லட்சத்துக்கும் குறைவான வருமானம் இருந்தால் என்ன நடக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. எனவே, நாங்கள் ஒரு குழுவாக அமர்ந்து, நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு 1 ரூபாய்க்கும் எந்த கட்டத்தில் வரி செலுத்துகிறீர்கள் என்பதை கண்டுபிடிக்க முயன்றோம். உதாரணமாக ரூ. 7.27 லட்சத்திற்கு, நீங்கள் எந்த வரியும் செலுத்தவில்லை. அதன் பிறகு தான் நீங்கள் வரி செலுத்த ஆரம்பிக்கிறீர்கள். உங்களிடம் ரூ. 50,000 நிலையான விலக்கு உள்ளது. புதிய திட்டத்தின் கீழ், நிலையான விலக்கு இல்லை என்பதே குறை. அது இப்போது கொடுக்கப்பட்டுள்ளது. பணம் செலுத்தும் விகிதத்திலும் எளிமையைக் கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post புதிய வரி விதிப்பின் கீழ் ரூ.7.27 லட்சம் வரை வருமான வரி இல்லை: நிர்மலா சீதாராமன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Udupi ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் சில மணி...