
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. திருக்கழுக்குன்றம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தனியார் இயக்கம் சார்பில் பரிசுகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், இயக்கத்தின் மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட முன்னாள் கவுன்சிலர் தீன்பக்ரூதின் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் 6 பேரை பாராட்டி, சால்வை அணிவித்து, அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் புத்தகங்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக இணை செயலாளர் சுகுமாறன், உதவி தலைமையாசிரியர் போனி ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் appeared first on Dinakaran.