×

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.7.44 கோடி மதிப்பீட்டில் மகளிர் விடுதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.7.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில், கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் டிபன்ஸ் காலனி பகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ரூ.7.44 கோடி மதிப்பீட்டில் மகளிர் விடுதி கட்டி முடிக்கப்பட்டது.

இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இதில், திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் கார்த்திக் தண்டபாணி, துணை தலைவர் லோகநாதன், நகராட்சி கமிஷனர் இளம்பரிதி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். இதனையடுத்து, நகராட்சிக்கு உட்பட்ட ஜெயலட்சுமி நகரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

The post நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.7.44 கோடி மதிப்பீட்டில் மகளிர் விடுதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Nandivaram-Kudovanchery Municipal Women's Hostel ,Chief Minister ,M.K.Stalin ,Kuduvanchery ,Nandivaram-Kudovanchery Municipality ,Tamil ,Nadu ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...