×

கோவில்பட்டி பள்ளியில் தமிழ் மன்ற தொடக்க விழா

கோவில்பட்டி, ஜூலை 15: கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் 75வது தமிழ் மன்ற தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலர் பத்மாவதி, ஐசிஎம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை ராதா, பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை செல்வி வரவேற்றார். நெல்லை பொதிகை தமிழ் சங்க தலைவர் கவிஞர் பேரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காமராஜ் புத்தகங்களையும், பிறந்தநாள் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களையும் பரிசாக வழங்கி பேசுகையில், ‘பாடப்புத்தகத்தோடு மற்ற புத்தகங்களையும் படிப்பதற்கு மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
காமராஜரின் முயற்சியினால் கல்வி அனைவருக்கும் கிடைத்துள்ளது. அவரது ஆட்சிக்காலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. புத்தகங்களை வாசிப்பதன் மூலம் மாணவர்கள் படைப்பாளிகளாக உருவாகலாம்’ என்றார். நிகழ்ச்சியில் பள்ளி குழு உறுப்பினர் ராஜா அமரேந்திரன், ஆசிரியர்கள் அருள் காந்தராஜ், முத்துச்செல்வி, சங்கரேஸ்வரி, ஜெயலட்சுமி, சங்கரா கிட்ஸ் வித்யாலயா முதல்வர் மீனா உள்பட பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியர் விஜயபொன் ராணி நன்றி கூறினார்.

The post கோவில்பட்டி பள்ளியில் தமிழ் மன்ற தொடக்க விழா appeared first on Dinakaran.

Tags : Tamil forum ,Govilbatti School ,Kowilbatti ,75th Tamil forum ,ceremony ,Nadar ,middle school ,forum ,
× RELATED அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் விழா