×

கோவில்பட்டி காந்தாரி அம்மன் கோயில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி, ஜூலை 15: கோவில்பட்டி காந்தாரியம்மன் கோயிலில் 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. மேலும் கோயிலில்  மகா புவனவராஹி அம்மன் பிரதிஷ்டை ஜீரோனோர்த்தன அஷ்டபந்தன விழாவும் நடைபெற்றது. அதிகாலையில் மங்கல இசையுடன் விழா ஆரம்பமானது. தொடர்ந்து திருமுறை பாராயணம், சங்கல்பம், விநாயகர் பூஜை, கும்ப பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிர ஹோமம், அஸ்திர ஹோமம்,  வராஹினி மூல மந்திர ஹோமம், மகா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வருஷாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பத்கர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு செல்லப்பாண்டிநகர்  புவன காந்தாரியம்மன் கோயில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

The post கோவில்பட்டி காந்தாரி அம்மன் கோயில் வருஷாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Kovilpatti Gandhari Amman Temple ,Varushabhishekam ,Kovilpatti ,Varushabhisheka ceremony ,Kovilpatti Kanthariamman Temple ,
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் சுமை...