×

2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திருத்தணி கோயில் ராஜகோபுர பணி மும்மரம்: அடுத்தாண்டு தொடக்கத்தில் கும்பாபிஷேகம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில், ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள ராஜகோபுரத்திற்கு, பல்வேறு போராட்டங்களுக்கு பின் வரும் ஜனவரி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ராஜகோபுரத்திற்கு வாசற்படி மற்றும் படிகள் அமைக்கும் பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது. திருத்தணி முருகன் கோயிலில் கடந்த, 2009ம் ஆண்டு, நவ. 18ல், இந்து அறநிலைய துறை அனுமதியுடன், கோயில் நிதியில் இருந்து, ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டும் பணி அப்போதைய இந்து அறநிலை துறை அமைச்சர் பெரியகருப்பன், அப்போதைய கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஈஸ்வரப்பன், இந்து அறநிலை அதிகாரிகள் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தனர்.

இதன் பிறகு, கோபுரம், 25 அடிக்கு அடித்தளம், 11 அடிக்கு கல்ஹாரம், 122 அடி உயரம் கோபுரம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. கடந்த, 2011க்குள் முடிக்க திட்டமிட்டிருந்தது. இதையடுத்து வந்த அதிமுக அரசு ராஜகோபுரம் அமைக்கும் பணியை கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு, 2017ம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் மீண்டும் ராஜகோபுர பணிகள் துவங்கி, 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜகோபுரத்தின் ஒன்பது நிலைகள் கட்டப்பட்டு, சிற்பவேலைப் பாடுகள் ஏற்படுத்தி வண்ணம் தீட்டும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து கோபுரத்திற்கு மின் விளக்கு பொருத்தப்பட்டது. கடந்த, 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ராஜகோபுரத்திற்கு இணைப்பு படிகள் அமைத்து கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.

ஆனால், ராஜகோபுரத்திற்கும், மலைக்கோயிலில் உள்ள தேர் வீதிக்கும் மொத்தம், 65 இணைப்பு படிகள் கற்களால் ஏற்படுவதற்கு தீர்மானித்து, ரூ.96 லட்சம் செலவாகும் என, திட்ட மதிப்பீடு செய்து இந்து அறநிலை துறையின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது. கடந்தாண்டு முடிவில் படிகள் அமைப்பதற்கு அனுமதி பெற்று படிகள் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டது. அதேபோல், ராஜகோபுரத்திற்கு வாசற்படி கல்தூண்கள் பெங்களூரு சேர்ந்த ஒரு உபயதாரர் மூலம் பெறப்பட்டது. இந்த கல்தூண்களை தொல்லியல் துறையில் நேரில் வந்து ஆய்வு செய்து, வாசற்படி வைப்பதற்கு தகுதி சான்று வழங்கியது.

தற்போது, வாசற்படி கல்தூண்களில் மயில், வேல் போன்ற ஒவியங்கள் வரையும் பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது. ராஜகோபுரத்திற்கு வாசற்படி கற்களால் வெட்டி தயாரிக்கும் பணிகள் தற்போது விரைந்து நடந்து வருகிறது. ஆடி மாதத்திற்கு பின் வாசற்படி கற்கள் பொருத்துவதற்கு தேதி குறித்து பணிகள் நடைபெறும். பின், ராஜகோபுரத்திற்கும், தேர்வீதிக்கும் இணைப்பு படிகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். இப்பணிகள் வரும் நான்கு மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அடுத்தாண்டு தொடக்கத்தில் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

* 15 ஆண்டு போராட்டத்திற்கு விடிவு
திருத்தணி முருகன் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டுவதற்கு கடந்த, 2009ம் ஆண்டு அப்போதைய இந்து அறநிலை துறை அமைச்சர் (பெரியகருப்பன்) அடிக்கல் நட்டு பணிகள் துவங்கி வைத்தார். பின், ராஜகோபுரத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்ட பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ராஜகோபுரம் பணிகள், கிடப்பில் போடப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி வந்து, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

அதன் பின் கடந்தாண்டு, ஜனவரி மாதத்தில் இந்து அறநிலைதுறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன், திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருத்தணி எம்எல்ஏ சந்திரன், அப்போதைய மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி பூபதி ஆகியோர் நேரில் வந்தனர். ராஜகோபுர பணிகளை பார்வையிட்டு, விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன் பேரில் பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது. அடுத்தாண்டு தொடக்கத்தில், ராஜகோபுரம் கும்பாபிேஷகம் நடத்த திட்டமிட்டுப்பட்டுள்ளது. கடந்த, 15 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் ராஜகோபுரத்திற்கு விரைவில் கும்பாபிேஷகம் நடத்தப்பட உள்ளதால், பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றுப்படுவதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.

The post 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திருத்தணி கோயில் ராஜகோபுர பணி மும்மரம்: அடுத்தாண்டு தொடக்கத்தில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Tiritani Temple ,Rajagopura ,Dizhagam ,Kumbaphishekam ,Tiruthani ,Tiritani Murugan Temple ,Rajagopuram ,Thirutani Temple ,
× RELATED திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுர...