சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: நமது திராவிட மாடல் அரசின் முதல் 2 முன்னுரிமைகள் கல்வியும், சுகாதாரமும்தான். இந்திய மாநிலங்களிலேயே சிறந்து விளங்கும் மாநிலமாகவும், வளர்ந்த நாடுகளுக்கு இணையாகவும் தமிழ்நாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ஆட்சி பொறுப்பேற்றது முதல், இத்துறைகளில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறோம். மாநில திட்டக்குழுவின் ஆய்வு முடிவுகள் நமது திட்டங்களின் தொலைநோக்கு தன்மைக்கு சான்றாக விளங்குகின்றன. நமது திராவிட மாடல் அரசின் கொள்கைகளின்படி, தமிழ்நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் நாம் ஆர்வத்துடன் பாடுபடுவோம்.
The post தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஆர்வத்துடன் பாடுபடுவோம்: முதல்வர் ட்விட் appeared first on Dinakaran.