×

பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகள் மூடப்படும் நிலையை தடுக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் இயங்கி வரும் சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் இன்று முதல் நூல் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்திருக்கின்றன. 700 சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டால் நாளொன்றுக்கு 35 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிப்பு ஏற்படுவதுடன், ரூ.100 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்படும் என்று சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது. மேலும், சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 12 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும்.

எனவே ஒன்றிய அரசு, பஞ்சின் மீது விதிக்கப்பட்ட 11 விழுக்காடு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். உயர்த்தப்பட்ட வங்கி கடன் வட்டி விகிதங்களை பழைய நிலைக்கு அதாவது 7.5 விழுக்காடு அளவுக்கு குறைக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு மின்சார கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை சிறு குறு நடுத்தர நூற்பாலைகள் கூட்டமைப்பு முன் வைத்திருக்கிறது. இதை பரிசீலனை செய்து, நூற்பாலைகள் மூடப்படும் நிலையை தடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகள் மூடப்படும் நிலையை தடுக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vico ,Chennai ,Madhyamik General Secretary ,Vaiko ,Tamil Nadu ,
× RELATED மதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்க துரை வைகோ வேண்டுகோள்