×

ஆர்எஸ்எஸ் தொடர்புடைய கோசாலைக்கு பாஜ ஆட்சியில் 35 ஏக்கர் நிலம் ஒதுக்கியது நிறுத்திவைப்பு: கர்நாடகா அரசு அதிரடி

பெங்களூரு: பாஜ ஆட்சியில் கோசாலைக்கு தானமாக வழங்கிய நில உத்தரவை முதல்வர் சித்தராமையா நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.பாஜ ஆட்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தொடர்புடைய அறக்கட்டளைக்கு அரசு நிலங்கள் தேர்தலுக்கு முன்பு தானமாக வழங்கப்பட்டன. இந்நிலையில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றதும் அரசு மே 25ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், அறக்கட்டளைக்கு வழங்கிய நிதி, நிலம் தொடர்பான அனைத்தும் நிறுத்திவைத்து தேர்தலுக்கு முன்பு இருந்த நிலை தொடர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜ ஆட்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தொடர்புடைய ஜனசேவா அறக்கட்டளைக்கு 35.33 ஏக்கர் மாடுகள் மேயும் புற்கள் நில தானத்தை சித்தராமையா நிறுத்திவைத்துள்ளார். ஜனசேவா அமைப்பு சார்பில் கோசாலை நடத்தப்படுகிறது. இதற்காக 35.33 ஏக்கர் நிலம் மாடுகள் மேய்வதற்காக பாஜ ஆட்சியில் தானமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆர்எஸ்எஸ் தொடர்புடைய கோசாலைக்கு பாஜ ஆட்சியில் 35 ஏக்கர் நிலம் ஒதுக்கியது நிறுத்திவைப்பு: கர்நாடகா அரசு அதிரடி appeared first on Dinakaran.

Tags : RSS ,Baja ,Bengaluru ,Chief President ,Sitaramaiah ,Gosala ,Dinakaran ,
× RELATED ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல்...