×

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள், மகன் மீது குற்றச்சாட்டு ரூ.100 கோடி, நிலம், எம்எல்ஏ பதவி வழங்குவதாக கூறி ஆதாரங்களை கேட்டு அழுத்தம்: சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் ஆளுநருக்கு கடிதம்

திருமலை: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள், மகன் ஆகியோர் மீது சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் குற்றச்சாட்டுகளை கூறி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ரூ.100 கோடி, நிலம், எம்எல்ஏ பதவி வழங்குவதாக கூறி ஆதாரங்களை கேட்டு அழுத்தம் கொடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் மகள் எம்எல்சி கவிதா மற்றும் மகன் அமைச்சர் கே.டி.ராமாராவ். இந்நிலையில் மகன் மற்றும் மகள் மீது சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டினை கடிதம் மூலம் தெலங்கானா கவர்னருக்கு எழுதி உள்ளார்.

ரூ.200 கோடி முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அமைச்சர் கேடிஆர் மீதும் பிஆர்எஸ் எம்எல்சி கவிதா மீதும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். கவிதா மற்றும் கே.டி.ஆரின் நெருங்கிய நண்பர்கள் தன்னிடம் உள்ள ஆதாரத்தை தருமாறு தனக்கு அழுத்தம் கொடுப்பதாக சுகேஷ் குற்றம் சாட்டி, அந்த ஆதாரங்களை கொடுத்தால் ரூ.100 கோடி ரொக்கம், ஷாம்ஷாபாத்தில் நிலம் மற்றும் எம்.எல்.ஏ. தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருவதாக அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் ரூ.200 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும், தனக்கும் கவிதாவுக்கும் இடையே நடந்த வாட்ஸ்அப் சாட்கள் அனைத்தும் தன்னிடம் இருப்பதாகவும் இந்த ஆதாரங்களை ஏற்கனவே 65-பி சான்றிதழாக அமலாக்கத்துறைக்கு வழங்கியதாகவும், கவிதாவிடம் இருந்து ரூ.15 கோடி பணத்தை பெற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு கொடுத்ததாகவும் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், சுகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரங்களை சிபிஐ விசாரிக்க வேண்டும் என விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

The post தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள், மகன் மீது குற்றச்சாட்டு ரூ.100 கோடி, நிலம், எம்எல்ஏ பதவி வழங்குவதாக கூறி ஆதாரங்களை கேட்டு அழுத்தம்: சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் ஆளுநருக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Chief Minister ,Chandrasekhar Rao ,MLA ,Sukesh Chandrasekhar ,Governor Tirumala ,Governor ,
× RELATED காங்கிரசுக்கு எதிராக கருத்து;...