×

ஆளும் கட்சிக்கு ஆதரவான தேர்தல் பத்திரத் திட்டம்: ஒன்றிய அரசு மீது காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தல் பத்திரத் திட்டங்கள் ஆளும் பாஜ அரசுக்கு சாதகமாக இருப்பதாகவும் இதில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது பற்றி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், “ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கையின்படி, 2016-17 மற்றும் 2021-22 நிதியாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பாஜவுக்கு கிடைத்த அரசியல் நன்கொடையான ரூ.5,271.97 கோடியில் 52 சதவீதத்திற்கும் அதிகமானவை தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்துள்ளது. அதே காலக்கட்டத்தில் இதர தேசிய கட்சிகள் பெற்றது ரூ.1,783.93 கோடி மட்டுமே. இதன் மூலம் சர்ச்சைக்குரிய, ஊழல் நிறைந்த, இட்டுக்கட்டப்பட்ட தேர்தல் பத்திரங்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் ஒரு திட்டம் என்பதை உணர்த்துகிறது. தேர்தல் நிதி அளிப்பில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. மோடி மற்றும் பாஜவின் கார்ப்பரேட் பண பேராசையை அம்பலப்படுத்துவோம்’’என்றார்.

* முழு மவுனம் மோடி சபதம்
காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் டிவிட்டரில் பதிவிடுகை, டெல்லியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார் என்ற விஷயம் சந்தோஷம் அளிக்கிறது. ஆனால், மணிப்பூரில் நடக்கும் கலவரம் பற்றி எதுவும் பேசக்கூடாது என அவர் முழு சபதத்தை எடுத்துள்ளார் போல் தெரிகிறது என குறிப்பிட்டார்.

The post ஆளும் கட்சிக்கு ஆதரவான தேர்தல் பத்திரத் திட்டம்: ஒன்றிய அரசு மீது காங். குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,Union Govt ,New Delhi ,BJP government ,Union government ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...