×

1.62 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்

ஜம்மு: அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 1,62,569 பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். அமர்நாத் யாத்திரை கடந்த 1ம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 31ம் தேதி யாத்திரை நிறைவடைகிறது. நேற்று காலை பக்வதி நகர் அடிவாரத்தில் இருந்து 7,245 பக்தர்கள் பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றனர். 4,101, பேர் பாஹல்காம் முகாமிற்கும் 3144 பக்தர்கள் பால்டால் முகாமிற்கும் சென்றனர். யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 1,62,569 பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

The post 1.62 லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Banilinga ,JAMMU ,Banilingam ,Amarnath ,Yatra ,
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...