×

தனலட்சுமி சீனிவாசன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: நவீன வசதிகளுடன் பெரம்பலூரில் திறப்பு

பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ஹாஸ்பிட்டலின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா பெரம்பலூரில் நேற்று நடந்தது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் திறந்து வைத்தார். கலெக்டர் கற்பகம் மகப்பேறு வளாகத்தையும், பல்கலைக்கழக இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் அவசர சிகிச்சை பிரிவையும், எஸ்.பி ஷ்யாமளாதேவி பொது மருத்துவ புற நோயாளிகள் பிரிவையும், ரோவர் கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் வரதராஜன் மருந்தகத்தையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்ரமணியம் கதிரியக்கவியல் பிரிவையும் திறந்து வைத்தனர்.

விழாவில் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பேசுகையில், இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அதிநவீன தொழில்நுட்பம், மிகவும் திறமையான மருத்துவ வல்லுநர்கள் மற்றும் 650 படுக்கை வசதிகளை கொண்டதாகும். சிடி ஸ்கேன், மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்கள், தொலைதூர ஆலோசனைகளுக்கான டெலிமெடிசின் உள்கட்டமைப்பு, ஆகியவையும் இங்கு அமைந்துள்ளது என்றார். ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்ரமணியம், எம்எல்ஏ பிரபாகரன், பெரம்பலூர் அறங்காவலர் குழுத்தலைவர் கலியபெருமாள் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் ஏர் மார்ஷல் (டாக்டர்) சி.கே.ரஞ்சன், சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் டாக்டர் எம்.லலிதா, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியுட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் மற்றும் ஹாஸ்பிட்டல் டீன் டாக்டர் வி. விஸ்வநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் செயலர் நீல்ராஜ், அறக்கட்டளை உறுப்பினர்கள் ராஜபூபதி, மணி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும நிதி அலுவலர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

The post தனலட்சுமி சீனிவாசன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: நவீன வசதிகளுடன் பெரம்பலூரில் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Dhanalakshmi Srinivasan Super Specialty Hospital ,Perambalur ,Thanalakshmi Srinivasan Institute of Medical Sciences and Hospital ,Thanalakshmi Srinivasan University ,Thanalakshmi Srinivasan Super Specialty Hospital ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...