×

ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டம் ஊட்டி பள்ளிக்கு நோட்டீஸ்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தீட்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 9ம் தேதியில் இருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக தனியார் பள்ளிக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் அதிருப்தியடைந்து உள்ளனர். இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், ‘‘ஏற்கனவே ஊட்டியில் பெய்த கனமழை காரணமாக அண்மையில் இரு நாட்களுக்கு மேல் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. தற்போது ஆர்எஸ்எஸ் கூட்டம் என கூறி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது’’ என்றனர். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறைக்கும் புகார் அனுப்பியுள்ளனர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ‘‘பள்ளிக்கு கடந்த ஒரு வாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டம் ஊட்டி பள்ளிக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : RSS Consulting Meeting Feeder School ,Feedi ,Nilgiris ,Deittukkal ,Needi ,RSS ,Dinakaran ,
× RELATED உரிய விலை கிடைப்பதால் உருளைக்கிழங்கு அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்