×

கூடலூரில் பாஜ சார்பில் போதைப்பொருள் இல்லா நீலகிரி குறித்த விழிப்புணர்வு

கூடலூர் : போதைப்பொருள் இல்லா நீலகிரி குறித்த விழிப்புணர்வு பேரணி பாஜ இளைஞரணி சார்பில் கூடலூரில் நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் அருகில் துவங்கிய பேரணி பழைய பஸ் நிலையம், சுங்கம் ரவுண்டானா, தாலுகா அலுவலகம் வழியாக காந்தி திடலில் முடிவடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு இளைஞர் அணி மாவட்டத் தலைவர் பிரேமயோகன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சந்திரா வரவேற்றார். ஸ்ரீ மதுரை ஊராட்சி மன்ற தலைவர் சுனில், அருள், தாயம்மா, மூத்த நிர்வாகி மயில்சாமி, கூடலூர் வடக்கு மண்டல தலைவர் சுதாகர், தீபக் ராம், கூடலூர் நகர துணை தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் சிவக்குமார், மீனவர் அணி தலைவர் கிருஷ்ணன், போதை ஒழிப்பு நிர்வாகி சந்தோஷ், நெல்லியாளம் நகர பொதுச்செயலாளர் தங்கம், விஎச்பி தன்ராஜ், இந்து முன்னணி பொறுப்பாளர் ஆனந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன் பேசுகையில், ‘‘இன்றைய இளைஞர்கள், மாணவ மாணவிகள் எதிர்காலத்தில் வீட்டையும், நாட்டையும் நிர்வகிக்கும் பொறுப்பு உடையவர்கள்.
இவர்கள் போதையின் பாதைக்கு செல்லாமல் நல்வழிப்படுத்துவது அனைவரது கடமையாகும். பள்ளி கல்லூரி மாணவர்களை போதை விழிப்புணர்வு பேரணிகளுக்காக சாலையில் ஊர்வலமாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் தாங்கள் போதையின் பாதைக்கு செல்லமாட்டோம் என்றும், தங்களது வாரிசுகளை போதையின் பாதைக்கு செல்லாமல் பாதுகாப்போம் என்ற உறுதிமொழி ஏற்று செயல்பட வேண்டும்’’ என பேசினார்.கூடலூர் நகர இளைஞரணி பொதுச் செயலாளர் பிரேம்வசந்த் நன்றி கூறினார்.

The post கூடலூரில் பாஜ சார்பில் போதைப்பொருள் இல்லா நீலகிரி குறித்த விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Baja ,Cuddalore ,Kuddalur ,Awareness Rally ,Nilgiri ,Baja Yuyangarani ,Dinakaran ,
× RELATED காலநிலை மாற்றத்தால் நோய் தாக்காமல்...