×

விம்பிள்டன் அரையிறுதியில் இன்று ஜோகோவிச்-ஜானிக் சின்னர் அல்கராஸ்-மெட்வெடேவ் மோதல்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் செக்குடியரசின் மார்கெட்டா வோன்ட்ரோசோ 6-3, 6-3 என்ற நேர் செட்டில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில், 6ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஓன்ஸ் ஜபீர் 6-7 (5-7), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் 2ம் நிலை வீராங்கனையான பெலாரசின் சபலென்காவை வென்றார்.

நாளை நடக்கும் பைனலில் ஜபீர்-மார்கெட்டா வோன்ட்ரோசோ மோதுகின்றனர். கடந்த முறை பைனலில் ரைபகினாவிடம் தோற்ற ஜபீர் இந்த முறை பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளார். ஆடவர் ஒற்றையரில் இன்று நடக்கும் அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச்- இத்தாலியின் ஜானிக் சின்னர், ஸ்பெயின் நம்பர் ஒன் வீரர் கார்லோஸ் அல்கராஸ், ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

The post விம்பிள்டன் அரையிறுதியில் இன்று ஜோகோவிச்-ஜானிக் சின்னர் அல்கராஸ்-மெட்வெடேவ் மோதல் appeared first on Dinakaran.

Tags : Djokovic ,Janik Sinner Algaras ,Medvedev ,Wimbledon ,London ,Wimbledon tennis ,Dinakaran ,
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!