×

2ம் சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் தொட்டிகளில் மண் நிரப்பும் பணி மும்முரம்

ஊட்டி : 2ம் சீசனுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்கள் மேற்கொள்வதற்காக 12 ஆயிரம் தொட்டிகளில் மண் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊட்டிக்கு நாள் தோறும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலனவர்கள் தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். அங்கு பூத்துக் குலுங்கும் மலர்கள், பல்வேறு வகையான தாவரங்கள், மலர்கள் மற்றும் புல்வெளிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இதனால், ஆண்டுதோறும் முதல் மற்றும் 2ம் சீசன்போது தாவரவியல் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசன் முடிந்த நிலையில், தற்போது 2ம் சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக தற்போது 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள் உற்பத்தி செய்வதில் தோட்டக்கலைத்துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக, தாவரவியல் பூங்கா நர்சரிகளில் நாற்று உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க இம்முறை 2ம் சீசன் போது, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரங்கள் செய்யவும் தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக, 12 ஆயிரம் தொட்டிகளில் இருந்த மலர் செடிகள் அகற்றப்பட்டு தற்போது புதிய நாற்றுகள் நடவு செய்ய மண் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாதம் இறுதியில் பூங்காவில் நடவு பணிகள் துவக்கப்படவுள்ளது. அதேசமயத்தில் தொட்டிகளிலும் பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்படவுள்ளது. இதனால், இம்முறை 2ம் சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களையும் காண முடியும் என தோட்டகலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 2ம் சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் தொட்டிகளில் மண் நிரப்பும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Ooty Government Botanical Garden ,
× RELATED மலர் கண்காட்சிக்கு தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா: அலங்கார பணி தீவிரம்