×

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சூழ்ந்துள்ள அசுத்த நீர்: ஒரு வாரமாக கழிவு நீர் தேங்கி நிற்பதால் மக்கள் போராட்டம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அடித்து துவைத்த கனமழை ஓய்ந்து விட்டாலும் லூதியான நகரில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துள்ள சாக்கடை நீருடன் கலந்த மழைநீர் சற்றும் வடியாததால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சமீபத்தில் பெய்த மழையால் பெருக்கெடுத்த வெள்ளம் ரசாயன கழிவு நீருடன் கலந்து லூதியானாவில் புத்தா நுல்லா, கண்டா நுல்லா பகுதிகளை சூழ்ந்தது. மழை நின்று ஒரு வாரம் கடந்த பின்னரும் வெள்ளநீர் வடியாததால் வீடுகளுக்குள் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

அடர் கருப்பு நிறத்திற்கு மாறிய கழிவு நீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அடுத்து பெரும்பாலான மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பலர் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். கழிவுநீரை வெளியேற்ற வலியுறுத்தி சந்தர் நகர், தாஜ்பூர் சாலை, சிவாஜி நகர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து கழிவுநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஈடுப்பட்டு இருக்கிறார்கள்.

The post பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சூழ்ந்துள்ள அசுத்த நீர்: ஒரு வாரமாக கழிவு நீர் தேங்கி நிற்பதால் மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Punjab ,Ludhiana ,Chandigarh ,Ludhiya ,
× RELATED பஞ்சாபில் 4 மக்களவை தொகுதிகளில் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!