×

ஸ்விட்சர்லாந்து – இத்தாலி இடையே 2 மணி நேரத்தில் பயணிக்கும் கேபிள் கார் சேவை: சாகச விரும்பிகள் உற்சாகம்

ரோம் : ஸ்விட்சர்லாந்து – இத்தாலி இடையே 2 மணி நேரத்தில் பயணிக்கும் கேபிள் கார் சேவையை பயன்படுத்த சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஆல்ப்ஸ் மலை தொடரின் Matterhorn சிகரம் வழியாக ஸ்விட்சர்லாந்தின் Zermatt மட்டும் இத்தாலியின் Cervinia.பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த கேபிள் கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,900 மீட்டர் தொலைவில் பனி சூழ்ந்த மலை பிரதேசத்தில் பயணிக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 1 மணி நேரத்தில் 1300 பேர் வரை பயணம் செய்யலாம்.

ஒரு கேபிள் காரில் 28 பேர் வரை அமரும் வகையில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. 2 மணி நேரத்தில் 9 ஸ்டேஷன்கள் இடம் பெற்றுள்ளன. அங்கு மலையேற்றம், மலை சறுக்கு, கோல்ப் விளையாட வசதிகள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் இந்த பயணம் மறக்க முடியாத நினைவுகளை தருவதாக தெரிவித்தனர். சாகச விரும்பிகளுக்கு இந்த பயணம் உற்சாகத்தை தந்தாலும் இது காலநிலை மாற்றத்துக்கு எதிரானது என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

The post ஸ்விட்சர்லாந்து – இத்தாலி இடையே 2 மணி நேரத்தில் பயணிக்கும் கேபிள் கார் சேவை: சாகச விரும்பிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Switzerland ,Italy ,Rome ,
× RELATED கனடாவில் ரூ.137 கோடி தங்கம் திருட்டு 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் கைது