×

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பது தொடர்பாக திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

மேலும் இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள், பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம், அமலாக்கத்துறை சோதனை விவகாரத்தை எழுப்புவது பற்றி கேள்வி எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. தக்காளி உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்தும், இலங்கை எல்லையில் தமிழக மீனவர்களின் கைது உள்ளிட்டவை குறித்தும் நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்புவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

The post நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MCM ,Rainy ,of Parliament ,G.K. Stalin ,Thisagam M. GP ,Chennai ,Dizhagam ,Raintime Segment of Parliament GP ,Djagam ,BCE ,Raintime ,Dinakaran ,
× RELATED முதல்வராக சந்திரபாபு பதவியேற்க உள்ள...