×

பிரதமரின் கேலியான படத்தை காட்டிய பெண் எம்.பி…. பிரதமர் மீது மற்றொரு எம்.பி. தண்ணீர் ஊற்றியதால் மோதல்: எந்த நாட்டில் தெரியுமா?

பிரிஸ்டினா : தென் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கொசோவோ நாட்டின் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கைகலப்பில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கொசோவோ நாட்டின் நாடாளுமன்றத்தில் வழக்கம் போல் அவை நடவடிக்கைகளின் போது, அந்த நாட்டு பிரதமர் அல்பின் குர்தி உரையாற்றி கொண்டு இருந்தார். அப்போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் பிரதமரின் கேலியான உருவப்படத்தை மேடை முன்பு வைத்தார்.

அந்த புகைப்படத்தை துணை பிரதமர் அகற்றிய போது, ஆத்திரம் அடைந்த மற்றொரு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் குவளையில் இருந்த தண்ணீரை பிரதமர் மீது ஊற்றினார். அப்போது ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறியது. கொசோவோ நாட்டின் நாடாளுமன்றம் அடிதடிக்கு பெயர் போன அவைகளில் ஒன்றாகும். கடந்த 2018ம் ஆண்டு புதிய எல்லை உடன்பாடு குறித்த மசோதா மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான கொசோவோ ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்பிக்களே கண்ணீர் புகைக்குண்டுகளை கொண்டு வந்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

The post பிரதமரின் கேலியான படத்தை காட்டிய பெண் எம்.பி…. பிரதமர் மீது மற்றொரு எம்.பி. தண்ணீர் ஊற்றியதால் மோதல்: எந்த நாட்டில் தெரியுமா? appeared first on Dinakaran.

Tags : Pristina ,Kosovo ,Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...