×

குறைந்த விலைக்கு மனை வாங்கி தருவதாக ஜிப்மர் செவிலியர், பணியாளர்களிடம் ₹40 லட்சம் மோசடி

புதுச்சேரி, ஜூலை 14: புதுவையில் குறைந்த விலைக்கு மனை வாங்கித் தருவதாக ஜிப்மர் செவிலியர், பணியாளர்களிடம் ரூ.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஐஆர்பிஎன் காவலர் உள்பட 2 பேரை கோரிமேடு போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, கோரிமேடு, ஆனந்தா நகரில் வசிப்பவர் தீபக் தாமஸ் (37). அப்பாசாமி பைத்தியசாமி கோயில் அருகே உணவகம் வைத்துள்ளார். இவரது மனைவி அனுமோல் (34). கேரளாவைச் சேர்ந்த ஜிப்மரில் செவிலியராக பணியாற்றி வருகிறார். தீபக் தாமஸின் ெதாழில் நண்பரான சுகேஷிடம் சொந்தமாக நிலம் வாங்க வேண்டுமென்ற விருப்பத்தை கூறியதாக தெரிகிறது.
சுகேஷின் தம்பி, புதுச்சேரி ஐஆர்பிஎன் காவல்துறையில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த சனில்குமார் என்பவரை அறிமுகம் செய்தாராம். இதையடுத்து 2021 அக்டோபரில் கோரிமேடு, காமராஜ் நகரிலுள்ள ஒரு மனையை அனுமோல் குடும்பத்தினருக்கு காண்பித்த சுகேஷம், ஐஆர்பிஎன் காவலர் சனில்குமாரும் அடுத்தடுத்து ரூ.10.82 லட்சம் வரை பணத்தை வங்கி ஆன்லைன் சேவை மூலமாக செலுத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் பிபிஏ அப்ரூவல் பிரச்னை இருப்பதாக கூறி மனையை கிரயம் செய்து கொடுக்காமல் தம்பதியை ஏமாற்றிய அண்ணன், தம்பி இருவரும், பணத்தை திருப்பி செலுத்தவில்லையாம். இதையடுத்து கோரிமேடு குடியிருப்பில் உள்ள சுனில்குமார் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது ஜிப்மரில் டாக்டர், செவிலியர், பணியாளர் என கேரளாவைச் சேர்ந்த மேலும் சிலரிடம் இதேபோல் குறைந்த விலைக்கு நல்ல மனை வாங்கித் தருவதாக ரூ.40 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவரவே அதிர்ச்சியடைந்த அனுமோல் உடனே கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார் 420 (மோசடி) பிரிவின்கீழ் வழக்குபதிந்து தலைமறைவான ஐஆர்பிஎன் காவலர், அவரது அண்ணன் சுகேஷ் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post குறைந்த விலைக்கு மனை வாங்கி தருவதாக ஜிப்மர் செவிலியர், பணியாளர்களிடம் ₹40 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Jipmar ,Puducherry ,Puduvai ,
× RELATED புற்றுநோய் நோயாளிகள் அலைக்கழிப்பு ஜிப்மர் அதிகாரியிடம் முறையீடு