×

திண்டுக்கல் அருகே டூவீலர் மோதி சோப்பு வியாபாரி பலி

திண்டுக்கல் ஜூலை 14: நிலக்கோட்டை அருகே சத்திரம் தெருவை சேர்ந்தவர் பத்திரிநாராயணன் (42). சோப்பு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பழைய கரூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே வியாபாரம் செய்து விட்டு நடந்து வந்த போது சின்னாளபட்டி கோட்டைபட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவர் ஓட்டி வந்த டூவீலர் இவர் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த பத்திரி நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தாடிக்கொம்பு எஸ்ஐ பிரபாகரன் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டுக்கல் அருகே டூவீலர் மோதி சோப்பு வியாபாரி பலி appeared first on Dinakaran.

Tags : Dintukal ,Dintugul ,Pathirinarayanan ,Sinn Street ,Nalakotta ,Dindigul ,Dinakaran ,
× RELATED தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல்,...