×

டூவீலர் பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி

திருமங்கலம், ஜூலை 14: மதுரை ஆண்டாள்கொட்டாரம் பகுதியை சேர்ந்த மரியதாஸ் மகன் யஸ்வந்த்குமார்(19). இவரது நண்பர்கள் விரகனூரினை சேர்ந்த சூரியபிரகாஷ்(19) மற்றும் திருப்புவனத்தை சேர்ந்த செந்தூர்பாபா(19). இவர்கள் மூவரும் ஒரே டூவீலரில் திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி தனியார் கல்லூரிக்கு நேற்று முன்தினம் சென்றனர். பின்னர் மீண்டும் மதுரைக்கு புறப்பட்டபோது, டூவீலரை யஸ்வந்த்குமார் ஓட்டியுள்ளார். ராஜபாளையம் ரோட்டில் உள்ள வளைவு பகுதியில் திரும்பியபோது டூவீலர் நிலைதடுமாறி சாலையோர பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் நண்பர்கள் மூவரும் படுகாயமடைந்து மயங்கினர். தகவலறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 108 ஆம்புலன்ஸ் மூலமாக இவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், யஸ்வந்த்குமார் நேற்று உயிரிழந்தார். காயமடைந்த சூரியபிரகாஷ், செந்தூர்பாபா ஆகியோருக்கு சிகிச்சை தொடர்கிறது. விபத்து குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post டூவீலர் பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Yaswanthkumar ,Mariadas ,Andalkottaram ,Madurai ,Suriyaprakash ,Virakanoor ,
× RELATED குளிக்கும்போது வீடியோ எடுத்து...