×

பரமக்குடி அருகே அரசு பள்ளியில் தரைத்தளம் சேதம்

பரமக்குடி, ஜூலை 14: பரமக்குடி அருகே தோளூர் கிராமத்தில் வகுப்பறை சேதமடைந்துள்ளதால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை உடனடியாக சரி செய்த கொடுக்க பெற்றோர்கள் கோரிக்கை. பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தோளூர் கிராமம். இந்த கிராமத்தில் 300க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

பள்ளி வகுப்பறையில் தரைத்தளம் மிகவும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வரவேண்டிய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது. தரைத்தளம் சேதமடைந்து உள்ளதால் மாணவர்களின் கால்களை பதம் பார்த்து விடுகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பரமக்குடி அருகே அரசு பள்ளியில் தரைத்தளம் சேதம் appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Paramakkudy ,Tolur ,Dinakaran ,
× RELATED பரமக்குடி நகர்மன்றத்துக்கு நிரந்தர...