×

பழைய இரும்பு கடையில் தீ விபத்து

 

திருப்பூர், ஜூலை14: திருப்பூர், கனியாம்பூண்டியை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் வேலம்பாளையம் ரிங் ரோடு,25 முக்கு பகுதியில்சொந்தமாக பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடையில் 5 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்து கடையைஅடைத்து விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று காலை பழைய இரும்பு கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதனை பார்த்த அக்கம் பக்கதினர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் ரூ, 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின் கசிவே இந்த தீ விபத்திற்கு காரணம் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காலை நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post பழைய இரும்பு கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Bhakyaraj ,Ganiyamboondi, Tirupur ,Velampalayam Ring Road ,25 Mukku ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...