×

ஆர்ப்பாட்டம்

 

தேனி, ஜூலை 14: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று இந்து எழுச்சி முன்னணி அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நகர, வட்டார பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, தர்மபுரி தொகுதி எம்.பி தொடர்ந்து இந்து மதக்கடவுளை இழிவுபடுத்துவதாக கூறி எம்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

The post ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni District Collector ,Hindu Uprising Front ,
× RELATED கலெக்டரிடம் கோரிக்கை மனு