×

மனைவி ஓட்டம்: கணவன் புகார்

 

பொன்னேரி: கடைக்கு சென்ற மனைவியை காணவில்லை என பொன்னேரி போலீசில் கணவன் புகார் கொடுத்துள்ளார். பொன்னேரி அடுத்த சின்னகாவனம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவரது மனைவி ரெஜினா (36). இவர், கடந்த 9ம் தேதி பொன்னேரி பஜார் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும், வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் என பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆனந்தன் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பெரிய காவனம் பேருந்து நிறுத்தத்தில் பாஸ்போர்ட் கடையில் வேலை செய்த வல்லூரை சேர்ந்த மகேஷ் குமார் (40) என்பவரும் மாயமானது தெரிய வந்தது. எனவே, இருவரும் ஓட்டம் பிடித்தனரா என்ற கோணத்தில் பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவி ஓட்டம்: கணவன் புகார் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Chinnakavanam ,Dinakaran ,
× RELATED பொன்னேரி அருகே மனைவியின் தகாத உறவுக்கு உதவிய மாமியார் கொலை; மருமகன் கைது