×

துலீப் கோப்பை பைனல்:தெற்கு மண்டலம் முன்னிலை

பெங்களூர்: தெற்கு, மேற்கு மண்டலங்களுக்கு இடையிலான துலீப் கோப்பை இறுதி ஆட்டம் பெங்களூரில் நடந்து வருகிறது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் ெத.மண்டலம் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 182ரன் எடுத்திருந்தது. களத்தில் இருந்த வாஷிங்டன் சுந்தர் 9, விஷாக் 5ரன்னுடன் 2வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். அவர்கள் இருவரும் 8வது ரன்னுக்கு 25ரன் சேர்த்தனர். அடுத்தடுத்து விக்கெட்கள் இழக்க தெற்கு மண்டலத்தின் முதல் இன்னிங்ஸ் விரைவாக முடிவுக்கு வந்தது. அந்த அணி 78.4ஓவரில் 213ரன் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 22ரன்னுடன் களத்தில் இருந்தார்.

மே.மண்டலம் தரப்பில் முலானி 3, அர்சன், சிந்தன், தர்மேந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். அதனையடுத்து மே.மண்டலம் முதல் இன்னிங்சை தொடங்கியது. பிரித்வி ஷா மட்டும் பொறுப்புடன் விளையாட மற்றவர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். முடிவில் பிரித்வி ஷா 65, ஹர்விக் 21, கேப்டன் பாஞ்சல் 11 ரன் எடுத்தனர். அரையிறுதியில் சதம் விளாசிய புஜாரா 9ரன் மட்டுமே எடுத்தார். இடையில் மழை, வெளிச்சமின்மை காரணமாக நேற்று குறைந்த ஓவர்களே வீசப்பட்டன.

அதனால் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் மே.மண்டலம் 45 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் மட்டுமே எடுத்துள்ளது. தெ.மண்டலத்தின் கவரப்பா 4, விஷாக் 2, வாசுகி கவுசிக் ஒரு விக்கெட் எடுத்தனர். தெ.மண்டலத்தை விட 84 ரன் பின்தங்கியுள்ள மே.மண்டலத்தின் வீரர்கள் அஜித் சேத் 5, தர்மேந்திர ஜடேஜா 4ரன்னுடன் 3வது நாளான இன்று 2வது இன்னிங்சை தொடர உள்ளனர்.

The post துலீப் கோப்பை பைனல்:தெற்கு மண்டலம் முன்னிலை appeared first on Dinakaran.

Tags : Tulip Cup Final ,South Zone ,Bangalore ,Duleep Cup ,South ,West ,Southern Zone ,Dinakaran ,
× RELATED மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக...