×

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் இன்று ஆடவர் அரையிறுதி: பைனலுக்கு வரப்போவது யாரு?

லண்டன்: விம்பிள்டன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் இன்று ஆடவர் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் அரையிறுதியில் உலகின் நெம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ்(20வயது), முன்னாள் நெம்பர் ஓன் வீரரான ரஷ்யாவின் டானில் மெத்வதேவ்(27வயது, 3வது ரேங்க்) ஆகியோர் களம் காணுகின்றனர். இருவரும் காலிறுதி வரை தங்களை விட தர வரிசையில் பல மடங்கு பின்தங்கிய வீரர்களுடன்தான் மோதியுள்ளனர். கூடவே இருவருக்கும் இது முதல் விம்பிள்டன் அரையிறுதி. இருவரும் தலா ஒரு யுஎஸ் சாம்பியன் பட்டம் வென்றவர்கள்.

அரையிறுதியில்தான் சமபலம் உள்ள வீரர்களாக மோத உள்ளனர். 2வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்(36வயது, 2வது ரேங்க்), இத்தாலியின் ஜானிக் சின்னர்(21வயது, 8வது ரேங்க்) ஆகியோர் களம் காண உள்ளனர். ஜானிக் சின்னரை பொறுத்தவரை இதுவரை நடந்த 4 சுற்று ஆட்டங்களிலும் சரி , காலிறுதியிலும் தன்னை விட தரவரிசையில் 75முதல் 111வது வரை என மிகவும் பின்தங்கிய வீரர்களைதான் வீழ்த்தி வந்துள்ளார்.

அரையிறுதியில் தான் தன்னை விட தர வரிசையில் முன்னணியில் உள்ள அனுபவம் வாய்ந்த ஜோகோவிச்சை எதிர்கொள்ள இருக்கிறார். கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள சின்னர், பைனலுக்கும் முதல் முறையாக முன்னேறுவரா, விம்பிள்டன்னில் 12வது முறையாக அரையிறுதியில் விளையாடும் ேஜாகோவிச் 9வது முறையாக பைனலுக்கு செல்வரா என்பது அவர்கள் காட்டும் வேகத்தை பொறுத்தது.

The post விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் இன்று ஆடவர் அரையிறுதி: பைனலுக்கு வரப்போவது யாரு? appeared first on Dinakaran.

Tags : Wimbledon Open Tennis ,London ,Wimbledon Open Grand Slam ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை