×

25 ஊராட்சிகளுக்கு குப்பை கழிவு அகற்ற மின்கல ஆட்டோக்கள்: எம்எல்ஏக்கள் வழங்கினர்

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பிடிஓ அலுவலக வளாகத்தில் தூய்மை பாரத இயக்கம், 15வது நிதிக்குழு மானியம் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குப்பை கழிவு அகற்ற ரூ.66.25 லட்சம் செலவில் 25 ஊராட்சிகளுக்கு மின்கல ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். பிடிஓ நடராஜன், ஒன்றியச் செயலாளர்கள் மூர்த்தி, சத்தியவேலு, தங்கம் முரளி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் சுரேஷ், பொறியாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு பாலவாக்கம், செஞ்சியகரம், செங்கரை, பூச்சி அத்திப்பேடு, பனப்பாக்கம், ஆயலச்சேரி உள்ளிட்ட 25 ஊராட்சிகளுக்கு மின்கல இயங்கு ஆட்டோக்களை வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், பாஸ்கர், கோடுவெளி குமார், தண்டலம் ரவி, ரவிச்சந்திரன், மொய்தீன், முனிவேல், வெங்கடாசலம், வக்கீல் சீனிவாசன், முனுசாமி, சம்பத், குணசேகரன், அப்புன் மற்றும் 25 ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். பிடிஓ சத்தியமூர்த்தி நன்றி கூறினார். ஏற்கனவே, கடந்த மே மாதம் 10 ஊராட்சிகளுக்கு 10 ஆட்டோக்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post 25 ஊராட்சிகளுக்கு குப்பை கழிவு அகற்ற மின்கல ஆட்டோக்கள்: எம்எல்ஏக்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Oothukottai ,Swachh Bharat Movement ,Ellapuram Union Periyapalayam PTO Office ,
× RELATED ஊத்துக்கோட்டை திமுக சார்பில் திமுக...