×

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பபடிவம் பதிவு செய்ய தன்னார்வலர்களுக்கு பயிற்சி

 

கந்தர்வகோட்டை, ஜூலை14: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் பதிவு செய்ய தன்னவர்களுக்கான பயிற்சியை கந்தர்வகோட்டை தாசில்தார் காமராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை பதிவு செய்யக்கூடிய பொறுப்பு இல்லம் கல்வி மைய தன்னார்வலருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதிப்பு மிக்க பணியை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். நமது ஒன்றியத்தில் 54 ரேசன் கடைகளில் விண்ணப்ப பதிவு செய்ய தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பத்தினை பொதுமக்கள் ரேஷன் கடை முகாம் அலுவலங்களில் பதிவு செய்ய வேண்டும். தொடந்து இப்பணி 12 நாட்கள் நடைபெறுகிறது. பொதுமக்களிடம் இருந்து பெறக்கூடிய விண்ணப்பங்களை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். கலைஞர் மகளிர் உதவித் தொகை தொடர்பாக 14 வழி காட்டு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான நபர்களுக்கு கட்டாயமாக மகளிர் உதவித்தொகை வழங்கப்படும். மகளிர் உதவித்தொகை பெறுவதற்கு 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

எந்தெந்த பகுதிகளில் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதோ அந்த பகுதிகளில் உள்ள முகாம்களில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். தன்னார்வலர்களுக்கு மொபைல் செயலியில் விண்ணப்பம் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பால் பிரான்சிஸ், திலகவதி. துணை வட்டாட்சியர் பால்பாண்டி, வட்ட வழங்கல் அலுவலர் உத்திராபதி, வருவாய் ஆய்வாளர்கள் சேகர், சந்தான லட்சுமி, கண்ணன் ஆகியோர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து பேசினார்கள். இப்பயிற்சியை இல்லம் தேடி கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா ஒருங்கிணைத்தார். ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் அனைவரையும் வரவேற்றார். இப்பயிற்சியின் கருத்தாளர்களாக சித்ரா , கயல்விழி ஆகியோர் செயல்பட்டனர்.

The post கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பபடிவம் பதிவு செய்ய தன்னார்வலர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kandarvakottai ,Pudukottai District ,Kandarvakotai Panchayat Union ,Dinakaran ,
× RELATED கந்தர்வகோட்டை வட்டாரத்தில் மண் பரிசோதனை செய்ய விவசாயிகள் அழைப்பு