×

வேப்பந்தட்டை அருகே வயல் சேற்று புதைக்குழியில் சிக்கிய பசுமாடு உயிருடன் மீட்பு

 

பெரம்பலூர், ஜூலை14: பெரம்பலூர் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேப்பந்தட்டை தாலுகா நூத்தப்பூர் கிராமம், தெற்கு காட்டுக் கொட்டகையைச் சேர்ந்த கருப்பையா மகன் முத்து சாமி என்பவருக்குச் சொந் தமான பசுமாடு ஒன்று வய ல்வெளியில் மேய்ந்து கொ ண்டிருந்தது. நடந்து கொண்டே சென்றபோது சாலை யோரத்தில் இருந்து வயலில் இறங்கியபோது வயலோ ரம் இருந்த சேற்று புதை குழியில் 4 கால்களும் புதை ந்து சிக்கிக் கொண்டதால், மேலே வரவும் முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தது.

இதுகுறித்து வயலின் உரி மையாளர் கொடுத்தத் தக வலின்பேரில், பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர் ந்த, உதவி மாவட்ட அலுவ லர் வீரபாகு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரை ந்து சென்று, கயிறு கட்டி மீட்டு, மாட்டின் உரிமையா ளரான முத்துசாமியிடம் உ யிருடன் ஒப்படைத்தனர். இதற்கு மாட்டின் உரிமை யாளர் குடும்பத்தினர் மட் டுமன்றி, அருகிலுள்ள வயல் உரிமையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் தீயணைப்புத் துறை வீரர் களுக்கு நன்றியைத் தெரி வித்துக் கொண்டனர்.

The post வேப்பந்தட்டை அருகே வயல் சேற்று புதைக்குழியில் சிக்கிய பசுமாடு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Vepanthandta ,Perambalur ,Vepanthatta Thaluka Noothapur Village ,Perambalur Station ,South Wild Bed ,Pepanthood ,Dinakaran ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை