×

செம்மர வியாபாரியிடம் லஞ்சம் மாதர்பாக்கம் வனச்சரக அதிகாரி அதிரடி கைது

கும்மிடிப்பூண்டி: செம்மர வியாபாரியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வனச்சரக அதிகாரி மற்றும் டிரைவர் கைது செய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் வனச்சரக அலுவலகத்தில் ஆந்திர மாநிலம் வரதய்யா பாளையத்தைச் சேர்ந்த முனிபாபு என்ற செம்மர வியாபாரி செம்மரங்களை எடுத்துச் செல்ல வாகன சிபாரிசு கடிதம் வாங்க இரண்டு தினங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அப்போது வனச்சரக அலுவலர் ஞானப்பன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, செம்மர வியாபாரி முனிபாபு தனக்கு சொந்தமான ஜே.எஸ்.எஸ் என்ற நிறுவனத்தின் மேலாளரின் மூலம் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்திக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிவுரையின்படி, செம்மர வியாபாரி முனிபாபுவின் தொழிற்சாலையின் மேலாளர் வனச்சரக அலுவலர் ஞானப்பன் டிரைவர் யுவராஜிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார். இதை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்காணித்து, வனச்சர அலுவலர் ஞானப்பனின் டிரைவர் யுவராஜை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து மூன்று மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின்னர் வனச்சரக அலுவலர் ஞானப்பன் மற்றும் அவரது ஓட்டுநர் யுவராஜ் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post செம்மர வியாபாரியிடம் லஞ்சம் மாதர்பாக்கம் வனச்சரக அதிகாரி அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Matharpakkam ,Kummidipoondi ,Matarpakkum ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில்...